இனவாதம் அற்ற அரசியல் ஞானஸ்தானத்தை சிங்கப்பூர் சிற்பியின் அறிவாலையத்தில் பெற்றிருப்பாரா சஜித்?,
சிங்கப்பூரின் வளர்ச்சிப் பாதையை நோக்கிய பயணம்: சஜித் பிரேமதாசவின் ஆய்வுச் சுற்றுப்பயணம்! 🇸🇬🇱🇰
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், சிங்கப்பூரின் ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்புகளைக் கண்டறியும் நோக்கில் அங்கு ஆய்வுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக, சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-யோங்-பூனை (George Yeo), புகழ்பெற்ற லீ குவான் யூ பொதுக் கொள்கைகள் கற்கைகள் நிறுவகத்தில் (LKYSPP) சந்தித்துக் கலந்துரையாடினார்.
சிந்தனைக்கு: பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரை, இனநல்லிணக்கத்தின் ஊடாக ஒரு தமிழர் கூட ஜனாதிபதியாக முடியும் என்ற நிலைக்கு உயர்த்தியவர் லீ குவான் யூ. அத்தகைய மாபெரும் சிற்பியின் பெயரால் இயங்கும் இந்த அறிவுத்தளத்திற்குச் சென்றதன் மூலம், இலங்கையின் அரசியலிலும் இனவாதமற்ற, உண்மையான தேசப்பற்றுடன் கூடிய ஒரு புதிய அரசியல் ஞானஸ்தானத்தை அவர் பெற்றிருப்பாரா சஜித்?
காலமே பதில் சொல்லும்! ⏳
#SajithPremadasa #GeorgeYeo #LKYSPP #Singapore #SriLanka #PublicPolicy #Reconciliation #PoliticalVisit

