அமெரிக்காவில் 5 ஆயிரம் பெற்றோர் இணைந்து சமூக ஊடகமான டிக்டொக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
டிக்டொக் சமூக ஊடகத்தை இந்த பெற்றோர் இலத்திரனியலின் மிகப்பெரிய புகையிலை எனக்கூறியுள்ளனர்.
மிக முக்கியமான வழக்காக கருதப்படும் இந்த வழக்கில் டிக்டொக் செயலி, அமெரிக்காவின் இளைய சமூகத்தை அழித்து வருவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
13 முதல் 19 வயதான இளையோர் மற்றும் இளைஞர்களின் மனநலத்தின் மீது டிக்டொக் தளம் கொண்டுள்ள தாக்கம் குறித்து பெற்றோர் பலர் கவலை தெரிவித்து வரும் நிலையில், 5 ஆயிரம் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கு அனைவரது கவனத்தையும் திருப்பியுள்ளது.
இளைய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த தாக்கத்திற்கு டிக்டொக் செயலியை உருவாக்கிய சீன நிறுவனமான ByteDance பொறுப்புக்கூற வேண்டும் என பெற்றோர் கூறியுள்ளனர்.
தொடர்ச்சியான பயன்பாட்டு தூண்டுதல் காரணமாக டிக்டொக் செயலி கணிசமான தீங்கை ஏற்படுத்துவதாக வழக்கை தாக்கல் செய்துள்ள கெல்வின் கூட் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வது போன்ற பதிவுகளின் மூலம் இளம் சமூதாயத்தின் மீது டிக்டொக் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.