யாழ் மாவட்ட பண்பாட்டு விழாவில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த யாழ் மாவட்ட பண்பாட்டு விழா இன்று (30.01.2024 ) நடைபெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பண்பாட்டு ஊர்வலத்துடன் அதிதிகள் அரங்கிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதன்போது கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாணம் என்ற ரீதியில் மிக திறமையாக செயற்படும் அனைத்து கலைஞர்களையும் தலைவணங்கி வரவேற்பதாகவும், கலை, கலாசார விழுமியங்களை மீட்டெடுக்க வேண்டியவர்களாகவும், மாகாணத்தில் அவற்றை வாழ வைக்க வேண்டியவர்களாகவும் நாம் இருப்பதாக இதன்போது வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்தார்
நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலையிலும், ஏனைய இயற்கை அனர்த்தங்களின் போதும், அதன் பின்னர் இற்றைவரை கலைகளை வளர்ப்பதற்கு அரும்பாடுப்பட்டுக்கொண்டிருக்கும் கலைஞர்களை மாகாண ரீதியில் கௌரவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் குறிப்பிட்டார்.