அரசின் வருமானத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ள போதிலும் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரிகளை அதிகரிக்கவோ எந்த வகையிலும் அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மறைமுக வரிகள் காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரிக்காது.பொருட்களின் கேள்விகள் மற்றும் விநியோகத்தின் அடிப்படையிலேயே அவற்றின் விலைகள் தீர்மானிக்கப்படும்.
இதனிடையே எதிர்வரும் 2025 ஆம் ஆண்டில் புதிய சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இந்த சொத்து வரியானது நேரடியான வரி.
பெரிய சொத்துக்கள் இருக்கும் நபர்களிடம் இருந்து இந்த சொத்து வரி அறவிடப்படும் எனவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.