வெஸ்லி மாதேவெரே மற்றும் பிராண்டன் மவுடா ஆகியோருக்கு அடுத்த நான்கு மாதங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் பங்கெடுக்க சிம்பாப்வே கிரிக்கெட் தடை விதித்துள்ளது.
வீரர்கள் பொழுதுபோக்கிற்காக போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் 50 சதவீதத்தை தடுத்து நிறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.
கடந்த மாதம் உள்நாட்டில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனைக்குப் பிறகு அவர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரைத் தவிர, கெவின் ஜசுசாவும் பொழுதுபோக்கிற்கான போதைப்பொருளை பயன்படுத்தியதாகச் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை (17) விசாரணைக்குப் பிறகு மாடவேரே மற்றும் மவுதா ஆகியோருக்கு அபராதம் வழங்கப்பட்ட நிலையில், கசுசா விரைவில் அவரது வழக்கினை எதிர்கொள்வார்.