ஜேர்மனியில் வாழும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஐரோப்பாவில் மிகவும் இறுக்கமான சட்டங்களையும் விதிமுறைகளையும் கொண்ட நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றும்.

ஜேர்மனியில் பிர­ஜா­வு­ரி­மை­யைப் பெறு­வ­தற்­கான விதி­களை தளர்த்தும் புதிய சட்­டத்­தி­ருத்­தங்கள் ஜேர்மன் பாரா­ளு­மன்­றத்­தில் கடந்தவாரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டன.

புதிய சட்­டத்­தி­ருத்­தத்­தின்­படி, ஜேர்­ம­னியில் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்கள் வசிப்போர் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்ணப்பிக்க முடியும். இது­வரை 8 வரு­டங்­களின் பின்­­னரே பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்க முடி­யு­மாக இருந்­தது. அதன் பிரகாரம் இக்­கா­ல­வ­ரம்பு தற்­போது 3 வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­­டுள்­ளது.

பிர­ஜா­வு­ரிமை கிடைக்கும்
இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மையைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்­டுள்­ளன. இது­வரை ஐரோப்­பிய ஒன்­றியம் மற்றும் சுவிட்­சர்­லாந்தை தவிர்ந்த ஏனைய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் ஜேர்மன் பிரஜா உரிமையை பெறும்­போது தமது முந்­தைய நாட்டின் பிர­ஜா­வு­ரி­மையை கைவிட வேண்­டி­யி­ருந்­தது. இந்நிலையில் தற்­போது இவ்­விதி தளர்த்­தப்­பட்­டுள்­ளது.

தம்­ப­தி­களில் ஒரு­­வர் சட்­ட­பூர்­வ­மாக 5 வரு­டங்­கள் ஜேர்­ம­னியில் வசித்தால் அவர்­க­ளுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜேர்மன் பிர­ஜா­வு­ரிமை கிடைக்கும். கடந்த வெள்ளிக்கிழமை ஜேர்மன் பாரா­ளு­மன்­றத்தில் இச்சட்டங்கள் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­ட­போது, 639 எம்.பிகள் ஆத­ர­வா­கவும் 234 பேர் எதி­ரா­கவும் வாக்களித்தனர்.

இச்­சட்­ட­மூலம் அமு­லுக்கு வரு­வ­தற்கு ஜனா­தி­பதி பிராங் வோல்ட்டர் ஸ்டேய்ன் மேயர் கையெ­ழுத்­திட வேண்டும். தொழி­லாளர் பற்­றாக்­கு­றைக்கு மத்­தியில், திறன்­கொண்ட தொழி­லா­ளர்­களை ஈர்ப்­ப­தற்கு இச்சட்டத்திருத்தகள் உதவும் என ஜேர்­ம­னியின் உள்­துறை அமைச்சர் நான்சி பயீசர் தெரி­வித்­துள்ளார்.

‘உல­கெங்கும் உள்ள தகு­தி­யான மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா, கன­டாவைப் போன்று நாம் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என அவர் கூறி­யுள்ளார்.

ஜேர்மனியில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்புகள்
இதே­வேளை, புக­லிடக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­ட­வர்­களை விரைவாக நாடு­க­டத்­து­வ­தற்­கான சட்­டத்­தி­ருத்­தங்­க­ளுக்கும் ஜேர்மனி பாரா­ளு­மன்றம் அங்கீகாரம் அளித்ததுள்ளது.

அந்தவகையில் ஜேர்மனியில் வசிக்கும் 8.44 கோடி மக்களில் 1.2 கோடிக்கும் (14 சதவீதம்) அதிகமானோருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை இல்லை.அதேசமயம் அவர்களில் 53 இலட்­சம் பேர் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் ஜேர்மனி­யில் வசிக்­கின்ற­னர் எனவும் ஜேர்­மனி அரசாங்கம் தெரி­வித்­துள்­ளது.

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்த பலர் ஐரோப்பிய நாடுகளில் இன்னமும் குடியுரிமை அல்லது இருப்புக்கான உரிய ஆவணங்களின்றி வாழ்கின்றனர். ஜேர்மனி மேற்கொண்டுள்ள இந்த சட்டத்திருத்தங்களின் ஊடாக பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு ஜேர்மனியில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதுடன், அவர்கள் அந்நாட்டில் சில சலுகைகளை பெறும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஜேர்மனி அரசாங்கத்துக்கு இங்கு வாழும் தமிழ் மக்கள் நன்றித் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin