கோவிட் வைரஸ் தொற்றை விட 20 மடங்கு கொடிய வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘Disease X’ என்று இதற்கு தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள இந்த தொற்று மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் திறன் கொண்ட 25 வைரஸ் குடும்பங்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்.
2018 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்ட நோய்களின் பட்டியலில் Disease X இணைக்கப்பட்டுள்ளது. இது கோவிட் தொற்றைவிட 20 மடங்கு மிகவும் ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எப்போதும் எதுவோண்டுமானாலும் நடக்கலாம்
தற்போது இதனால் எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு தயாராக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“தெரியாத விடயங்கள் நடக்கலாம், எப்போதும் எதுவோண்டுமானாலும் நடக்கலாம். அதனால் நமக்குத் தெரியாத நோய்களுக்கு ஒரு ஒதுக்கிடத்தை நாம் வைத்திருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கான உலகளாவிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து கொடிய X நோயை எதிர்த்துப் போராட ஒரு ‘தொற்றுநோய் ஒப்பந்தத்தில்’ கையெழுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக இயக்குனர் குறிப்பிடுகிறார்.
உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய அடினோம் கெப்ரேயஸ், இந்த ஆண்டு மே மாதத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
Disease X என்றால் என்ன?
இதுவொரு குறிப்பிட்ட நோய் அல்ல என்றும், கோவிட் போன்ற ஒரு சாத்தியமான வைரஸ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் ஆகவோ, பாக்டீரியாவாகவோ அல்லது பூஞ்சையாகவோ இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு கடுமையான நுண்ணுயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.
“இந்த சாத்தியமான அச்சுறுத்தலை ‘Disease X’ என்று பெயரிடுவது, தடுப்பூசிகள் அல்லது மருந்து சிகிச்சைகள் இல்லாத ஒரு நோயைக் கையாள்வதற்கான தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகும், மேலும் இது கடுமையான தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.