அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு முன் மோடி செய்த காரியம்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று திங்கட்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த 19ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். கேலோ இந்தியா போட்டிகளை சென்னையில் தொடங்கி வைக்கவே பிரதமர் மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

தமிழ்நாடு விஜயத்தில் மோடி ராமேஸ்வரத்துக்கு புனித யாத்திரையொன்றையும் மேற்கொண்டிருந்தார். தனுஷ்கோடிக்கு பயணம் செய்து புண்ணிய ஷேத்திரங்களில் வழிபாடு செய்த பிரதமர் மோடி, ராமர் இலங்கைக்கு வானர கனங்கள் மூலம் பாலத்தை நிர்மாணித்தார் எனக் கூறப்படும் பகுதியில் பூக்களை தூவி வணங்கியுள்ளார்.

கடற்கரையில் பூக்கள் தூவியதோடு, மூச்சு பயிற்சி தியானமும் மேற்கொண்டிருந்தார். ராமாயண இதிகாசப்படி அரிச்சல் முனை பகுதியில் இருந்துதான் ராமர் இலங்கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் அதியுச்ச ஆன்மீகத்தின் வெளியாடாக இந்த விடயம் இருந்ததாக ஆன்மீகவாதிகளும் மதத் தலைவரும் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin