பிரித்தானிய கட்டுப்பாட்டு தீவில் சிக்கித் தவிக்கும் இலங்கை தமிழர்கள் ஆபிரிக்காவிற்கு நாடு கடத்த திட்டம்

இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரித்தானிய கட்டுப்பாட்டில் இருக்கும் டியாகோ கார்சியா தீவில் உள்ள முகாம், புலம்பெயர்ந்தோரை நீண்ட காலம் தங்கவைக்க ஏற்ற இடம் அல்ல என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து நடத்தும் இந்த தற்காலிக முகாமில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, கனடாவுக்குச் செல்ல முயன்றபோது அவர்கள் பயணித்த படகு பழுதானதை அடுத்து, ஒக்டோபர் 2021 இல் தமிழர்களின் முதல் குழு டியாகோ கார்சியாவில் தரையிறங்கியது.

3

இந்த தீவு பல நூறு கிலோ மீற்றர் தனிமையில் இருப்பதுடன், அங்கீகரிக்கப்படாத எந்தப் பார்வையாளர்களும் தீவிற்குள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளனர். இந்த தீவில் 60 புகலிட கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்பினர்கள் 2023ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் குறித்த தீவிற்கு சென்றனர். அகதிகள் இந்த தீவிற்குள் நுழைந்த இரண்டு வருடங்களின் பின்னர் முதல்முறையாக அதிகாரிகள் தீவிற்குள் வந்துள்ளனர்.

“டியாகோ கார்சியா ஒரு இராணுவத் தளத்தைக் கொண்ட ஒரு தீவு ஆகும், எந்த குடிமக்களும் அங்கு இல்லை, இந்த குழுவிற்கு நீண்டகால வசிப்பிடத்திற்கு ஏற்ற இடம் அல்ல” என்று ஒரு செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில், “சர்வதேச சட்டத்திற்கு இணங்க, சர்வதேச பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கான தீர்வுகளைப் பாதுகாக்கவும் பிரித்தானியாவை தொடர்ந்து கேட்டுக்கொள்கிறோம்.” என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

e

2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறும் பலர், அதன் விளைவாக உள்நாட்டில் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறுகின்றனர்.

இங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் தீவின் நிலைமைகளை நரகம் என்று விவரித்துள்ளனர், பலர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறியுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டங்களும் நடந்துள்ளன.

“நாங்கள் உயிரற்ற வாழ்க்கையை வாழ்கிறோம். நான் இறந்த மனிதனைப் போல் வாழ்கிறேன்” என்று ஒருவர் கடந்த ஆண்டு பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

3

இந்நிலையில், புலம்பெயர்ந்தோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இங்கிலாந்து சட்டத்தரணிகள் தீவிற்குள் நுழைய முயன்று வருவதாக சட்டத்தரணி டெஸ்ஸா கிரிகோரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஆபிரிக்க நாடு ஒன்றுக்கு நாடு கடத்தும் தீர்மானம் ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் நிறைவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

y

Recommended For You

About the Author: admin