காலிஸ்தான் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னுவைக் கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் குற்றவாளியான இந்தியரான நிகில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பராகுவே உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய கோரி குப்தா தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பன்னுவைக் கொல்ல சதி செய்ததாக நிகில் குப்தாவுக்கு எதிராக அமெரிக்க சமஷ்டி பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் குப்தா செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை நாடு கடத்த பராகுவே உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கினாலும் அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது இலகுவான விடயமல்ல என கூறப்படகிறது.
பன்னு வழக்கில் குப்தாவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என பராகுவே உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செக் குடியரசின் நீதியமைச்சர் அங்கீகரிக்க வேண்டும். அமைச்சர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதற்கு கால அவகாசம் எதுவுமில்லை.
பராகுவே நீதிமன்ற தீர்ப்பில், செக் குடியரசு நீதியமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளது.
இந்த நடவடிக்கைகள் முடிந்த பின்னரே குப்தா அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவார்.
காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் பன்னு, அமெரிக்க மற்றும் கனேடிய நாடுகளின் குடியுரிமையை கொண்டுள்ளார்.