அமேசானில் ராமர் கோவில் ‘பிரசாதம்’: அலைமோதும் பக்தர்கள்

இந்தியாவின உத்ரபிரதேசம் அயோத்தில் கட்டப்பட்டுவரும் ராமர் கோயில் திறப்பு விழா நாளைமறுதினம் (22) திங்கட்கிழமை இடம்பெற உள்ளது.

வட இந்திய முறைப்படி 161 அடி உயரத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கோயில் திறக்கப்பட உள்ளது. அதற்காக 22ஆம் திகதி பல மாநிலங்களில் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்தர்களை கவரும் வகையில் பல்வேறு மோசடிகளும் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருவதை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்துள்ளது.

‘ஸ்ரீ ராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்ற பெயரில் அமேசானில் போலியான பிரசாதங்கள் விற்கப்பட்டு வருவதாகவும் இதனை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தலைமை ஆணையர் ரோஹித் குமார் சிங் கூறுகிறார்.

இவ்வாறு இனிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் அமேசான் “ஏமாற்றும் வர்த்தக நடைமுறைகளில்” ஈடுபடுவதாக அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பும் (CAIT) குற்றம் சுமத்தியுள்ளது.

‘ரகுபதி நெய் லடூ’, ‘கோயா கோபி லடூ’, ‘நெய் பூந்தி லடூ’ மற்றும் ‘தேசி மாட்டுப் பால் பேடா’ போன்ற தயாரிப்புகள் ராமர் கோயில் பிரசாதமாக விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அமேசானத்திடம் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த பிரசாதத்தை கொள்வனவு செய்ய பக்தர்கள அலைமோதுவதால் இதில் எச்சரிக்கையாக இருக்குமாறும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin