வடகொரியா தொடர்ந்தும் தனது அணு ஆயுதங்களின் திறனை அதிகரித்து வரும் நிலையில்,மேற்கு கடல் பகுதியில் அணுசக்தி திறன் கொண்ட ஆளில்லா விமானத்தை அண்மையில் பரிசோதித்ததாக நேற்று (19) அறிவித்துள்ளது.
துறைமுகங்கள் மற்றும் போர்க்கப்பல்களை அழிக்கும் திறன் இந்த ஆளில்லா விமானத்திற்கு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தின் ஜெஜு தீவுக்கு அருகில் இந்த வாரம் தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் நடத்திய பாரிய இராணுவப் பயிற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த சோதனையை நடத்தியதாக வடகொரியாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆளில்லா விமானம் கடந்த ஆண்டு முதன் முறையாக பரிசோதிக்கப்பட்டதாகவும் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து தூண்டிவிடும் முயற்சிகளை மேற்கொண்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் வடகொரியா எச்சரித்துள்ளது.