நாடு முழுவதும் அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதுடன், எதிர்வரும் 30ஆம் திகதி இதன் முதலாவது பேரணியை நடத்த தீர்மானித்துள்ளது.
வற் வரி அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரிப்பு, தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமை, கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் சட்டமூலங்களை நிறைவேற்றி வருகின்றமை உட்பட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையிலும் இந்த பேரணிகள் நடத்தப்பட உள்ளன.
இவ்வருடம் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதன் காரணமாக அனைத்துக் கட்சிகளும் கூட்டணிகளை இறுதிப்படுத்துவது மற்றும் பிரசாரங்களை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அதன் பிரகாரம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் ஐக்கிய மக்கள் சக்தி அரச எதிர்ப்பு பேரணி என்ற தொனிப்பொருளில் தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தும் நடவடிக்களை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.