எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, கோடிகளில் விலைபேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நாட்களில் நாட்டின் ஏனைய முக்கிய பிரச்சினைகளை விட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன.
அதிலும் சில முக்கியஸ்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாங்களும் களமிறங்கப் போவதாக தெரிவித்து தற்போதைக்கு தங்கள் பிரச்சார நடவடிக்கைகளையும் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவும் ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கவுள்ள இரண்டு வேட்பாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர், அமைச்சர் டயானா கமகே தனக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறுவதாக இருந்தால் அதற்காக பத்து கோடி ரூபா வரை அள்ளிக் கொடுக்கவும் தயாராக இருப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.
எனினும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதுவரை எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.