யாழில் பேராசையால் கோடிக்கணக்கில் பணத்தை இழக்கும் மக்கள்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் மோசடியாளர்களிடம் சிக்கி கோடிக்கணக்கில் பணத்தை இழக்கும் சம்பங்கள் அண்மைய நாட்களாக அதிகமாக பதிவாகிவருகின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கும் முன்னர் கூட பணப்பரிசு ஆசைக்காட்டி ஒருவரிடம் இருந்து 18 லட்சம் மோடிசெய்யப்பட்டிருந்த நிலையில் தென்னிலங்கையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தற்போது வெளிநாட்டு மோகத்தால் ஒரு கோடி ரூபாவிறகும் மேல் பணத்தை பரிகொடுத்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பில் வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலிக்கு அனுப்பி வைப்பதாக 23 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நெல்லியடி பொலிஸ் பிரிவினுள் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் யாழ்ப்பாணதில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 நபர்களிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய் வரையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் சந்தேகநபரை காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதேவேளை, மோசடியாளர்களிடம் இருந்து மிகவும் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin