செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது அளவுக்கு மீறிய வகையில் தாக்குதல் நடத்திவரும் யேமன் ஆதரவுப் படையான ஹூத்திகளை தாக்குதவதைத் தவிர பிரித்தானியாவுக்கு வேறு வழியில்லை என முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் மேற்கொள்வதற்கு முன்னர் ஹூத்தி போராளிக் குழுவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து செங்கடலில் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலுடன் தொடர்பு இல்லாத கப்பல்களே இவ்வாறு தாக்கப்பட்டன. இதனால் கப்பல் நிறுவனங்கள் இப்போது செங்கடல் வழியாகச் செல்லாமல் தென்னாப்பிரிக்காவைச் சுற்றியுள்ள நீண்ட பாதையைப் பயன்படுத்துகின்றன.
இதன் காரணமாக பிரித்தானியா உள்ளிட்ட உலக நாடுகளில் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் கப்பல் போக்குவரத்தை சுதந்திரமாக முன்னெடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் டேவிட் கெமரூன் கூறியுள்ளார்.
ஹூதி போராளிகளின் தாக்குதல் தொடர்ந்தால் பிரித்தானியா மீண்டும் தாக்குதல்களை நடத்தும். செங்கடல் வழியை ஹூத்திகள் மறித்தால் முக்கிய உணவுச் சங்கிலிகள் பாதிக்கப்படும்.
இதனால் பிரித்தானியா உள்ளிட்ட உலக நாடுகளில் விலைகள் கட்டுப்பாடு இன்றி உயரும் என டேவிட் கெமரூன் மேலும் தெரிவித்துள்ளார்.