அமெரிக்காவில் பனி,பலத்த காற்று,கடுமையான பனிப்பொழிவு என்பன ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் 40 மில்லியனுக்கு மேற்பட்டோர் வாழும் பிரதேசங்களுக்கு குளிர்கால வானிலை குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
அடுத்த சில நாட்களில் அமெரிக்காவின் பெரும்பாலான பிரதேசங்களில் கடுமையான குளிருடன் கூடிய காலநிலை நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவின் பில்லிங்ஸ், மோன்டானா போன்ற பிரதேசங்களில் வெப்பநிலையானது மைனஸ் 25 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், நியூஜெர்சி மாநிலத்தில் வெள்ளத்தால் பலர் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கிழக்கு பிரதேசங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தெற்குப் பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஓர்கன்ஸா, லூசியானா போன்ற மாநிலங்களில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.