பொதுவாக உடல்நிலை சரியில்லை என்று மருத்துவர்களிடம் பரிசோதனைக்கு செல்லும் போது சில மருத்துவர்கள் நாக்கை தான் பரிசோதிப்பார்கள். ஏனெனில் நாக்கு நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்தும்.
ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் நாக்கு
நாம் அன்றாடம் நாக்கை சுத்தம் செய்யாமல் இருந்தால், பூஞ்சை தொற்றும், பாக்டீரியா பாதிப்பு, வாய் துர்நாற்றம் இவை ஏற்படும்.
நாக்கில் விரிசல் காணப்பட்டால், சிறுநீரக பிரச்சினைகள் அல்லது நீரிழிவு நோயைக் குறிக்கிறது.
நாக்கு கறுப்பாகவோ, அல்லது வெள்ளை நிறத்தில் கொப்புளங்கள் ஏற்பட்டால் செரிமான பிரச்சினையின் அறிகுறிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நாக்கில் அடிக்கடி புண் ஏற்பட்டால் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கின்றனர் என்பதை புரிந்து கொள்ளவும்.
இதுவே நாக்கு மென்மையாக இருந்தால் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்.
நாக்கை எலுமிச்சை சாறில் மஞ்சள் தூள் கலந்து நாக்கில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும் இதனால் நாக்கில் எந்தவொரு நோய் தொற்றும் ஏற்படாது.