2024ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் புதிய தரவரிசை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு நாடுகள் முதலிடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.
“ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ்“ நாடுகளின் பயண ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
ஐந்தாண்டுகள் தொடர்ந்து முதலிடத்தில் ஜப்பான் இருந்துவந்த நிலையில் இம்முறை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் இந்த தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளன.
இந்த நாடுகளின் கடவுச்சீட்டில் உலகெங்கிலும் உள்ள 227 நாடுகளில் 194 நாடுகளுக்கு சலுகைகள் உட்பட இலவச விசா வழங்கப்படுகிறது.
தென் கொரிய கடவுச்சீட்டில் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயனிக்க முடியும். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் கடவுச்சீட்டில் 192 நாடுகளுக்கு பயணிக்க முடியும். இந்த மூன்று நாடுகளும் இரண்டாவது இடத்தில் உள்ளன. அவுஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளன.
பெல்ஜியம், லக்சம்பர்க், நோர்வே, போர்ச்சுகல் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.கிரீஸ், மால்டா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளன.
இதற்கு அடுத்தப்படியாக செக் குடியரசு, நியூசிலாந்து, போலந்து, கனடா, ஹங்கேரி, அமெரிக்கா, எஸ்டோனியா, லிதுவேனியா, லித்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
இந்தப் பட்டியிலில் இலங்கை 96ஆவது இடத்தை பிடித்துள்ளது. அத்துடன், இந்தியா 62 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 101ஆவது இடத்திலும் தரவரிசை படுத்தப்பட்டுள்ளது.