கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டும் விழா

கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கு எனும் பெயர் சூட்டும் விழா அண்மையில் கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் தேசிய கல்வியியற் கல்லூரி அமைவதற்கு தனது சொந்த காணியில் சுமார் 210 பரப்பினை அன்பளிப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பெற்றோர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் நினைவாக கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்திற்கு சரஸ்வதி கலையரங்கம் என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மீனா தம்பதிகளும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், கட்சியின் பிரமுகர்களும் கல்லூரியின் விரிவுரையாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

இதன்போது கல்லூரியில் அமைய பெற்றுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு கலையரங்க நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுகல் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மீனா தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

Recommended For You

About the Author: S.R.KARAN