பூமியை தாக்கப் போகும் சூரிய புயல் நிகழப்போவது என்ன?

சக்தி வாய்ந்த சூரிய புயல்கள் பூமியை வரும் வெள்ளிக்கிழமை தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவின் தேசிய வளிமண்டல அமைப்பு (NOAA) தெரிவித்துள்ளது.

இதில் இருந்து வெளிப்படும் புவி காந்தப்புயல்களால் ரேடியோ, இண்டெர்நெட் ஆகியவை பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூரியன் தான் நாம் வாழும் பூமிக்கு அடிப்படையான ஒன்றாக உள்ளது. பூமியில் உயிர்கள் தோன்றவும் வாழவும் சூரியனே முக்கிய காரணம். பூமியில் வாழும் அனைத்தும் உயிரினங்களுக்கும் சூரியன் நிச்சயம் தேவைப்படுகிறது.

தொலைநோக்கி மூலம் ஆய்வு
சூரிய கதிர்கள் மூலமே செடிகள் உணவுகளை உற்பத்தி செய்கிறது. அதுவே பூமியில் பல உயிர்கள் தோன்றவும் காரணமாக உள்ளது. இதன் காரணமாகச் சூரியனில் ஏற்படும் சிறிய மாற்றங்களை கூட ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்தே வருகின்றனர்.

சூரியனில் ஏற்படும் ஒரு சிறு மாற்றங்கள் கூட பல கோடி மைல் தொலைவுகளுக்கு அப்பால் உள்ள பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்க்கூடியது.

சூரியனில் இருந்து பூமி சுமார் 147.54 மில்லியன் கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும் சூரியனில் ஏற்படும் காந்தப்புயல்கள் உள்ளிட்டவற்றை சூரிய மண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வல்லமை கொண்டது.

இதனால் தான், பல கோடி மைல் அப்பால் உள்ள சூரியன் குறித்துத் தெரிந்து கொள்ள விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.. அமெரிக்கா தனது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதேபோல் சூரியன் குறித்த ஆராய்ச்சிக்காக இந்தியாவும் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. திட்டமிட்டபடி பயணித்து கொண்டு இருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் இலக்கை எட்டியவுடன் தனது ஆய்வை தொடங்க இருக்கிறது

NOAA நிறுவனம்
இது ஒருபக்கம் இருக்க சக்தி வாய்ந்த சூரிய புயல்கள் பூமியை இன்று (டிசம்பர் 1) என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த NOAA என்ற முன்னறிவிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்று சொல்லப்படும் சூரிய புயல்கள் காந்த அலைகளை ஏற்படுத்தும் என்றும் இது ரேடியோ, ஜிபிஎஸ், மற்றும் செயற்கைகோள் தொடர்புகள் ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்றும் கூறபப்ட்டுள்ளது.

அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையமான NOAA இந்த தகவலை தெரிவித்துள்ளது. G2 என்ற அளவில் அதாவது, மிதமான அடர்த்தியுடன் இந்த புயல் இருக்கலாம் என்றும் NOAA கூறியது.

ஆனால், ஜி 3 கிளாஸ் புயல் அளவுக்கு வலுவானதாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர். இந்த சூரிய புயல் கடந்த 37 ஆம் தேதி கொரோனால் மாஸ் எஜெக்‌ஷனில் இருந்து வெளியேறியதாகவும் NOAA தெரிவித்துள்ளது.

பூமியை இந்த சூரிய புயல் வியாழக்கிழமை இரவு முதல் தாக்கத் தொடங்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை முடிவடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனா மாஸ் எஜெக்‌ஷன் என்பது சூரியனில் இருந்து வெளிப்படும் சக்திவாய்ந்த திரள்களை கொண்டதாக இருக்கும்.

இந்த திரள்கள் பூமியன் தொழில்நுட்ப கட்டமைப்பை சேதப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதாவது, செயற்கை கோள் தொடர்புகள் மற்றும் ரேடியோ சிக்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்தக் கூடும்.

வரவிருக்கும் சூரிய புயல் சற்று மிதமானது என்றாலும் கூட உயர் அட்ச ரேகையில் உள்ள தொலைத்தொடர்பு அமைப்புகளுக்கு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

Recommended For You

About the Author: webeditor