உடுதும்பறை விபத்து: மூவர் பலி, சிறுவன் உட்பட மூவர் காயம்!

உடுதும்பறை விபத்து: மூவர் பலி, சிறுவன் உட்பட மூவர் காயம்!

உடுதும்பறை கரம்பகெட்டிய பகுதியில் இன்று மாலை 5.45 அளவில் இடம்பெற்ற கோர விபத்தில், பயணிகள் வான் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில், இரு பெண்கள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5 வயது சிறுவன் ஒருவன் உட்பட மூவர் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin