அடுத்த இரண்டு மாதங்களில் சுற்றாடல் சட்டம் புதுப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் சட்டத்தை அமுல்படுத்துவதில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டம் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
சுற்றாடல் சட்டம் மற்றும் சுற்றாடல் தொடர்பான பல சட்டங்கள் உரிய நேரத்தில் அமுலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள போதிலும், அவை அனைத்தையும் தீர்க்க தற்போதுள்ள கட்டளைகள் புதுப்பிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பூகோள அரசியலுக்கு அடுத்தப்படியாக சுற்றுச்சூழல் தொடர்பிலேயே உலக நாடுகள் அதிக சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.