நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் சமன் ஏகநாயக்க (சோமிசார பண்டார ஏகநாயக்க), இன்று புதன்கிழமை (28) நீதிமன்றத்தில் ஆஜரானார்.
📋 குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) இன்று சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையின்படி, இந்த வழக்கில் சமன் ஏகநாயக்க இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சார்பாக ஜனாதிபதி வழக்கறிஞர் கலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜராகி தனது சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

