மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க புதிய புரட்சிகரமான திட்டம்: ஜனாதிபதியின் அறிவிப்பு!
இலங்கையின் இதயப்பகுதியான மத்திய மலைநாட்டின் பழைய செழுமையை மீட்டெடுக்கவும், அதன் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டிலேயே ஒரு புதிய அதிகாரசபையை (Authority) அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இது வெறும் நிர்வாக மாற்றமல்ல, மலைநாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு பசுமைப் புரட்சி என்கிறார் ஜனாதிபதி!
📌 இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களாக, விவசாயம், நீர்ப்பாசனம், வனவிலங்கு பாதுகாப்பு எனத் தனித்தனியாக இயங்கும் துறைகள் அனைத்தும் இனி ஒரே அதிகாரசபையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும். இதன் மூலம் வேலைகள் துரிதப்படுத்தப்படும்.
நிலப்பயன்பாடு, விவசாயம் மற்றும் வீடமைப்புத் திட்டங்களை முறைப்படுத்த நாடாளுமன்றத்தில் வலுவான தனிச் சட்டம் கொண்டுவரப்படும். இதன்மூலம் சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் மண்சரிவு அபாயங்கள் தடுக்கப்படும்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன், மத்திய மலைநாடு உலகத்தரம் வாய்ந்த சூழல் மண்டலமாக மாற்றப்படும்.
🌏இதன்மூலம் நாட்டின் உயிர்நாடியான மத்திய மலைநாட்டை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது அனைவரதும் கட்டாயக் கடமையாகும்.” என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டின் நீரேந்து நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் இந்த உன்னத முயற்சிக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கொரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

