வட மற்றும் தென் கொரியாவில் சுனாமி அலைகள்

ஜப்பானை பாதித்த பாரிய நிலநடுக்கத்தை அடுத்து தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையை ஒரு மீட்டருக்கும் குறைவான சுனாமி தாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடடுள்ளன.

அடுத்த சில மணி நேரத்தில் மேலும் பெரிய அலைகள் எழ வாய்ப்புள்ளதாக தென் கொரிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் கடற்கரையை அடைந்த முதல் சுனாமி அலை 67 சென்டிமீட்டர் (2.2 அடி) என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் சுனாமி நிலைமை 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவில், 2 மீட்டருக்கும் உயரமான சுனாமி அலைகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக இரு நாடுகளின் கரையோர மக்களும் உயரமான பகுதிகளுக்கு வெளியேற அறிவுறுத்தப்பட்டதாக வட மற்றும் தென் கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு கடற்கரை மாகாணத்தில் வசிப்பவர்கள் கடற்கரையிலிருந்து தூர பிரதேசங்களுக்கு செல்லுமாறு அவசர அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin