வட்டாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்கு ஆசியாவுக்கு ஆயுதங்களை வழங்கும் திட்டத்தை ஜப்பான் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் பாதுகாப்பு மோசமடைந்து வரும் சூழலைக் கருத்திற்கொண்டு தென்கிழக்கு ஆசிய வட்டாரத்தில் உள்ள நாடுகளுக்கு ஆயுதங்களை நேரடியாக ஏற்றுமதி செய்வது தொடர்பில் ஜப்பான் ஆரர்யு்நு்த வருகிறது.
ஜப்பான்-ஆசியான் 50 ஆண்டு உறவைக் கொண்டாடும் உச்சநிலைக் கூட்டம் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றது.
உச்சநிலைக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்கிழக்கு ஆசியத் தலைவர்கள் உள்ளிட்டோர் சட்ட, ஒழுங்கைப் பாதுகாக்க இன்னும் அதிக பங்களிப்கை வழங்குமாறு ஜப்பானிடம் வலியுறுத்தினர்.
இதனையடுத்தே, தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.
அதிகாரத்துவ பாதுகாப்பு உதவிக் கட்டமைப்பின்கீழ் பிலிப்பைன்ஸ், பங்ளாதேஷ், மலேசியா, ஃபிஜி போன்ற நாடுகளுக்கு இராணுவ சாதனங்களை ஜப்பான் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது