அரசுக்கு எதிராக புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் மேர்வின் சில்வா

கூடிய விரைவில் புதிய அரசியல் கட்சி நாட்டுக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அருகில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, மகேந்திர ஜயசேகர, நவீன் குணரத்ன உட்பட பலர் அந்த கட்சியுடன் இணைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்துடனோ அல்லது சஜித் பிரேமதாசவுடனோ அந்த கட்சி இணையாது.

நாட்டின் சட்டத்தரணிகள் உட்பட தொழில் நிபுணர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி மக்கள் பலத்தை காண்பிப்போம்.

நாட்டின் பெரும்பாலான மக்கள் புதிய அரசியல் கட்சியை ஏற்றுக்கொள்வார்கள். நான் அந்த கட்சியில் பிரதான பதவி வகிக்கின்றேன்.

தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் ஊடக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு நாட்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித உணர்வுமில்லை எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin