ஜப்பானிய நிதி அமைச்சர் Shun’ichi Suzuki எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ஆசிய நாடுகளுடனான ஜப்பானின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் அந்த நாட்டு நிதி அமைச்சர் எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி முதல் நான்கு நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பானிய நிதி அமைச்சர் Shun’ichi Suzuki தெரிவித்துள்ளார்.
Shun’ichi Suzuki அவரது விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கடன் மறுசீரமைப்பு குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மற்றும் ஜப்பான் தலைமையிலான கடனாளிகள் குழு, கடனை மீள செலுத்துவதை ஒத்திவைப்பது மற்றும் வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பான அடிப்படை உடன்பாட்டை கடந்த நவம்பர் மாதம் எட்டியது.
இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு நிலையான முன்னேற்றம் மிகவும் முக்கியமானது என ஜப்பானிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.