ரோஜாவுக்கு கிரிக்கெட் சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்!

ஆந்திர மாநிலம் குண்டூரில் “ஆடுதம் ஆந்திரா” திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஆந்திர மாநில விளையாட்டுத்துறை அமைச்சரான நடிகை ரோஜா உட்பட பல்வேறு துறைகளின் அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்தான் அந்த சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது. அதாவது, நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார்.

அப்போது, அருகில் இருந்த அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜாவை கிரிக்கெட் விளையாடும்படி கூறினார்.

ஆனால், நடிகை ரோஜாவோ, ​​தனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்று கூறினார். உடனே, ரோஜாவை அழைத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அவருக்கு கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொடுத்தார்.

மேலும், ரோஜாவிடம் கிரிக்கெட் பேட்டை கொடுத்த ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தலையில் கைவைத்து ஆசிர்வதித்தார்.

எனினும், கிரிக்கெட் பேட்டை எப்படிப் பிடிப்பது, பந்தை எப்படி அடிப்பது என்று தெரியாமல் ரோஜா தடுமாறினார்.

இதைக் கண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பேட்டை எப்படிப் பிடிப்பது, பந்தை எப்படி அடிப்பது, கிரீஸில் எப்படி நிற்பது என்று நடிகை ரோஜாவுக்கு சொல்லிக் கொடுத்தார்.

இதன் பிறகு, ஜெகன்மோகன் ரெட்டி சொல்லிக் கொடுத்தபடியே, ரோஜா பேட்டை பிடித்து பந்தை அடித்தார்.

நடிகை ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த ஆந்திர முதல்வர்முதலில் பேட்டை எப்படிப் பிடிப்பது என்றுகூட தெரியாமல் இருந்த ரோஜா, இப்படி பந்தை விளாசியதை பார்த்ததும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், அருகிலிருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கைதட்டி ரோஜாவை பாராட்டினர்.

இந்த நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, நடிகையும் அமைச்சருமான ரோஜாவுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended For You

About the Author: admin