வடக்கில் கொரோனா அச்சம் இல்லை : டெங்கு அச்சம் மட்டுமே

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. ஆனால் அண்மைய நாட்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன.

தினமும் சராசரியாக 100 பேர் வரையில் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே வடமாகாண மக்கள் கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய தேவையில்லை. ஆனால் டெங்கு நோய் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin