மலையகத்தின் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா பங்களிக்கவேண்டும்: ஜீவன் கோரிக்கை

சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக நீர்வழங்கல் துறையில் அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் Paul Stephens பாராட்டியுள்ளார்.

அத்துடன், நீர்வழங்கல் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அமைச்சரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது.

இதன்போது நீர்வழங்கல் துறையில் இடம்பெற்றுவரும் மறுசீரமைப்புகள் பற்றி தூதவருக்கு அமைச்சர் விளக்கமளித்தார். அதற்கு அவுஸ்திரேலியாவின் உதவியும், அனுபவ பகிர்வும் அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும், அதற்கு அவுஸ்திரேலியாவும் பங்களிப்பு செய்ய வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin