இந்தியாவின் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகில் உள்ள அரபிக்கடலில் வர்த்தக கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இந்த தாக்குதலுக்கு காரணமான ஆளில்லா விமானம் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கெம் புளூட்டோ என்ற கெமிக்கல் டேங்கர் கப்பல் இந்தியாவின் மங்களூர் துறைமுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, இந்திய கடற்கரையில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானம் தாக்கியதால் ஏற்பட்ட தீயை கப்பல் பணியாளர்கள் அணைத்தனர். கப்பலை தாக்கிய ஆளில்லா விமானம் ஈரானில் இருந்து ஏவப்பட்டது.
2021ஆம் ஆண்டிலிருந்து வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது இது ஏழாவது முறையாகும் என பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு ஈரான் இன்னும் பதிலளிக்கவில்லை.
ஒருபுறம், ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களைத் தாக்கிக்கொண்டிருந்தபோது, இந்தியாவுக்கு அருகில் ஒரு கப்பலை ஈரானிய ஆளில்லா விமானம் தாக்கியபோது சர்வதேச பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.
எனினும், ட்ரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆளில்லா விமானம் மூலம் தாக்கப்பட்ட கப்பலுக்கு இந்திய கடலோர காவல்படை உதவிகளையும் செய்து வருகிறது.