இன்று பிரான்ஸ் மாநகர சபை தேர்தல் களம் இறங்கும் 130 தமிழ் இளைஞர்கள்…
இன்று(15 March 2026 )நடைபெறவுள்ள France மாநகராட்சி தேர்தலில் 130-க்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
அவர்களில் சுமாராக 90 பேர் ஈழத் தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமான ஒன்று ,மேலும் சுமார் 30–35 பேர் இந்தியத் தமிழர்கள்.
இதில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரான்சில் குடியேறி நீண்ட வரலாற்றைக் கொண்ட பாண்டிச்சேரி (புதுச்சேரி) தமிழ் சமூகத்தினரும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இணைந்து சுமார் 30–35 பேர் இம்முறை தேர்தலில் பங்கேற்கின்றனர்.
இது பிரான்சில் வாழும் தமிழ் சமூகத்தின் அரசியல் பங்கேற்பில் ஒரு முக்கியமான மாற்றமாகவும் வளர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது. கூட்டு பொறுப்புணர்வுடன் தேர்தலில் களம் காணும் அனைத்து தமிழர் வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.


