நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதில் நாம் உண்ணும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது
குறிப்பாக இரவு நேரத்தில் சாப்பிட்டு வருவது உங்க உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது உங்க உடலில் உள்ள கபம், வாதம் மற்றும் பித்தம் போன்ற தோஷத்தை சமநிலையில் வைக்க உதவுகிறது.
இருப்பினும் இரவு நேரத்தில் ஒரு சில உணவுகளை எடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கே கேடு விளைவிக்கும். அவற்றை தவிர்ப்பது அவசியமாகும். தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக் கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அதனால் இரவில் இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
ஐஸ்கிரீல் சர்க்கரையும் கலந்திருக்கிறது. இவை இரவு நேரத்தில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.
இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும்.
இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.
மதுபானம் தூக்க முறையை முற்றிலுமாக மாற்றிவிடும். உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துவிடும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழ முடியாது