வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களுக்கு நேர்மறை ஆற்றலையும், எதிர்மறை ஆற்றலையும் வெளியிடும் தன்மை உண்டு.
அதன்படி நமது வீட்டை அலங்கரித்துக் கொண்டால் நேர்மறை சக்தி வந்து சேரும்.
சீன வாஸ்து எனும் ஃபெங்க்சுயி முறையில் ஆமை எப்படித் தன் ஐந்து உறுப்புகளையும் (தலை மற்றும் கால்கள்) உள்ளடக்கிக்கொண்டு எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது.
அதாவது, நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் உடனடியாக நிறைவேற்றுவதையும் வாஸ்து ஆமை குறிக்கிறது.
செல்வத்தை தருவதாக நம்பப்படும் வாஸ்து ஆமை, உறவுகளில் உருவாகும் சிக்கல்களையும் நீக்குமாம்.
விஷ்ணு பகவானின் அவதாரம்
விஷ்ணு பகவானின் இரண்டாம் அவதாரமான கூர்ம அவதாரம் ஆமையை குறிக்கிறது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை அமிர்தம் எடுக்க மேரு மலையை கொண்டு கடையும் போது விஷ்ணு ஆமை உருவம் கொண்டு மலையை தாங்கி நின்று துணை செய்ததாக புராணம் குறிப்பிட்டுள்ளது.
எங்கு வைக்க வேண்டும்?
உலோகத்தால் செய்யப்பட்ட ஆமையை, நீர் நிறைந்த ஒரு குவளையில் இட்டு, வீட்டினுள் வடக்கு திசையில் வைக்க வேண்டும். வடக்கில் படுக்கை அறை அமைந்திருக்குமானால், வெறும் உலோக ஆமையைப் பராமரிக்கலாம். இப்படிச் செய்வதால் பொருளாதார மேம்பாடு, பகைவரை வெல்லுதல், நீண்ட ஆயுள், பொறுமை முதலான பல பலன்களை நம்மால் ஈட்ட முடியும்.
இதுமட்டுமல்லாது ஆமையின் கூர்மாவதாரத்தில் தோன்றிய வலம்புரி சங்கு, காமதேனு, கற்பகவிருக்ஷம் ச்யமந்தக மணி, ஐராவதம், உச்சிஸ்ரவைஸ் என அனைத்துமே வாஸ்து தோஷம் போக்கும் பொருட்களாகும்.
இத்தகைய சிறப்புடைய கூர்ம மூர்த்திக்கான தனிக்கோயில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.