பணவீக்கம் 2.8% ஆக அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலை சுட்டெணின் பிரகாரம் பணவீக்க விகிதம் 2023 நவம்பரில் 2.8% ஆக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (DCS) தெரிவித்துள்ளது.

2023 ஒக்டோபரில் 1.0 வீதமாக பணவீக்கம் பதிவாகியிருந்த நிலையில் ஒக்டோபருடன் ஒப்பிடுகையில் 1.8 வீத அதிகரிப்பாகும்.

இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஒக்டோபரில் -2.2% ஆக இருந்த நிலையில், நவம்பரில் -5.2% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் உணவு அல்லாத பணவீக்கம் ஒக்டோபரில் பதிவான 6.3% இலிருந்து 7.1% ஆக அதிகரித்துள்ளது.

மரக்கறிகள் (0.62%), அரிசி (0.14%), சீனி(0.09%), தேங்காய் (0.06%), பெரிய வெங்காயம் (0.06%), பச்சை மிளகாய் (0.06%), சிவப்பு வெங்காயம் (0.05%) ஆகியவற்றுக்கான குறியீட்டு மதிப்புகளும் அதிகரித்துள்ளன.

சுண்ணாம்பு (0.03%), தேங்காய் எண்ணெய் (0.02%), உருளைக்கிழங்கு (0.02%), மைசூர் பருப்பு (0.01%), தேயிலை (0.01%) மற்றும் பழங்கள் (0.01%) ஆகியவற்றின் குறியீட்டு மதிப்புகளும் அதிகரித்துள்ளன.

இருப்பினும், மீன் (0.19%), கோழி (0.08%), உலர்ந்த மீன் (0.07%), முட்டை (0.07%), பச்சைப்பயறு (0.02%) மற்றும் மிளகாய்த் தூள் (0.01%) ஆகியவற்றுக்கான குறியீட்டு மதிப்புகளில் ஓரளவு குறைவு பதிவாகியுள்ளது.

ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதத்தில் உணவு அல்லாத குழுக்களின் குறியீட்டு மதிப்புகள் அதிகரித்ததற்கு முக்கியமாக வீட்டுவசதி, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருளின் விலை அதிகரிப்பு காரணமாக உள்ளது.

Recommended For You

About the Author: admin