செல்போன் ஸ்பீக்கர் நாளாக நாளாக அதன் ஒலியை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க தொடங்கும்.
இதன் காரணமாக ஒருவரை தொடர்புக்கொண்டு பேசுவதில் இருந்து ஆடியோ கேட்பது வரையில் சிரமமாக இருக்கும்.
ஸ்பீக்கரின் இருந்து சத்தம் குறைவாக கேட்டால் அதில் தூசி படிந்திருக்க வாய்ப்புள்ளது.
தூசியை தட்டி எடுத்தால் கூட சத்தம் நன்றாக கேட்கும்.
அப்படியும் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை Settings சென்று சில மாற்றங்களை செய்யலாம்.
Settings-இல் Volume என்ற ஸ்லைட் பாரை கிளிக் செய்ய வேண்டும். அவ்வாறு கிளிக் செய்தால் ரிங்டோன், அலாரம், மீடியா என பல ஆப்ஷன்கள் தோன்றும். அவற்றை செட் செய்த பிறகு மொபைல் போனின் ஒலி தன்மை சீராக உள்ளதா என சோதிக்கலாம்.
அப்போதும் ஒலி சிக்கல் சீராகவில்லை என்றால் Volume செயலியை தனியாக ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.