வெங்காய ஏற்றுமதி தடை: சிரமத்திற்குள் இறக்குமதி நாடுகள்

இந்தியாவின் பெரிய வெங்காய ஏற்றுமதித்தடை மேலும் ஐந்து மாதங்களுக்கு நீக்கப்படமாட்டாது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் வரை இந்தியாவில் வெங்காய விலையை குறைவாக வைத்திருக்க மோடி அரசாங்கம் தீர்மானித்தது.

இதன் காரணமாகவே இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஏற்றுமதி சந்தையில் இருந்து இந்தியா விலகியுள்ள நிலையில் சீனா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் வெங்காயத்தின் விலையினை அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.

இருப்பினும், ஏற்றுமதி தடையால் இந்தியாவில் வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 50 வீதம் குறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin