இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
“கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் 50 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு என்னை நேரில் சந்திக்க தேவையில்லை.
நாங்கள் முடிவெடுப்பதில் வெளிப்படையாகவும், விரைவாகவும் இருக்கிறோம். குறித்த நேரத்திற்குள் மிகவும் தரமாக வேலையை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம்.
அமைச்சகம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வங்கியாளர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக கருதுகிறோம்.
தரமான வேலைகளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அதனால்தான் ஏழு உலக சாதனைகளைச் செய்ய முடிந்துள்ளது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மகத்தான சாதனை இது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சாலைகள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இருக்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.
ஐந்தாண்டுகளில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக மாற்றமடையும், குறைந்த அளவு மாசுபாட்டுடன் போக்குவரத்து மாறும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.