தடுப்பூசி போட்டவர்களையும் புதிய கொரோனா தாக்கும்

2020ஆம் ஆண்டு உலகையே முடக்கிய கொரோனா தொற்று மக்களிடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியது.

அதன்பிறகு ஏற்பட்ட இரண்டாவது அலையில் ஏராளமான உயிரிழப்புகள் பதிவாகின. இதிலிருந்து மீண்டு வருவதற்கு ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்டது.

இந்நிலையில் தான் ஜே.என்.1 என்ற புதிய உருமாறிய வைரஸ் பாதிப்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மெல்ல பரவ தொடங்கிய திரிபு வேறு நாட்டு மக்களையும் தாக்கியது.

இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களையும் ஜே.என்.1 கொரோனா தாக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மேலும், ஜே.என்.1 உடன் தொடர்புடைய அறிகுறிகள் என எடுத்துக் கொண்டால் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி மற்றும் லேசான இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகும்.

இருப்பினும், ஜே.என்.1 முந்தைய கொரோனா வைரஸ் திரிபுகளை விட கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin