யாழில் ஒரு கிளாஸ் வெந்நீர் 100 ரூபாய்க்கு விற்பனை

உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் உண்மையென உறுதிப்படுத்தியுள்ள உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், கட்டணப்பட்டியல் தேசிய நுகர்வோர் முன்னணி வசம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

“இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது மிகப் பெரிய அநீதி.. இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உரிய தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து கவலை கொள்கிறோம், அத்துடன், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ உணவகம் ஒன்றிலேயே நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் சுடு நீருக்கு இவ்வளவு விலையை வசூலிக்க நேரிடுகிறது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin