ஆசிரியர் சங்கம் ஆளுநருடன் சந்திப்பு

இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வடமாகாண ஆளுநருக்கும் இடையேயான சந்திப்பொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வடமாகாணத்தில் கல்வி செயற்பாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம், அதிபர், ஆசிரியர்கள் இடமாற்றம், பாடசாலைகளில் உள்ள வளப் பிரசினை போன்ற விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

புதிய அதிபர் நியமனத்தால், இதுவரை பதில் கடமை ஆற்றியவர்கள் பாதிப்புக்குள்ளகியுள்ளதாகவும், கடினமான காலப்பகுதியில் பாடசாலை சமூகத்தை கட்டியெழுப்ப பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம், ஆளுநரிடம் தெரிவித்தனர்.

போட்டிப் பரீட்சையூடாக தெரிவுசெய்யப்பட்ட அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இதனால் பல வருடங்களாக பதில் கடமை புரிந்த அதிபர்கள், உள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

இந்நிலையில், ஏனைய மாகாணங்களில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர்.

விடயங்களை கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், தேவை ஏற்படின் ஜனாதிபதியின் கவனத்திற்கும் விடயங்களை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட குழுவினர், வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin