மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் விடுதலை

ரஜினி வேலாயுதபிள்ளை என்ற யுவதி கூட்டுப் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

உரும்பிராயைச் சேர்ந்த 23 வயதான ரஜினி வேலாயுதபிள்ளை 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி கோண்டாவில் சோதனைச் சாவடியில் இராணுவத்தினரால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஹெவாபீடிகே சரத்சந்திர மற்றும் கோப்ரல் கமகே கித்சிறி ஆகிய இரு இராணுவ வீரர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த இரு இராணுவ வீரர்களையும் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிப்பதாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், மூன்றாவது பிரதிவாதியான கோப்ரல் காமினி சமன் லியனகேவை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin