பல்வேறு தரப்பினரும் கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறைகளை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.
டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறையில் பரிவர்த்தனை செய்வதற்கு எவ்வித கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்பதால் மக்கள் நம்பி டிஜிட்டல் பேமென்ட் முறைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போன் பே மற்றும் பேடிஎம் போன்றே, செல்போன் சிம்முக்கு ரீசார்ஜ் செய்வதற்கு கூகுள் பேவும் தற்போது தனிப்பட்ட கட்டணங்களை வசூலிக்க தொடங்கியுள்ளது.
இதுநாள் வரையில் கூகுள் பேவில் ரீசார்ஜுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படாத நிலையில் தற்போது கட்டணங்கள் வசூலிக்கப்படுவது வாடிக்கையாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.