சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும்
மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 09 கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா தெல்லிப்பளை அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயப் பிரதான மண்டபத்தில் 10.12.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்குச் சிவநெறிப் பிரகாசர் சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கம் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் ஆன்மீகவிருந்தினராக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பா. தனபாலன் அவர்கள் கலத்து சிறப்பித்தார்.
சேக்கிழார் பெருமான் , கண்ணப்ப நாயனார் குருபூஜையைத் தொடர்த்து மாணவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. அதனையடுத்து , ” தொண்டு செய்து நாலாரில் கண்ணிடத்து அப்ப வல்லேன் அல்லன் ” என்னும் விடயப்பொருளில் சைவப்புலவர் செ. த. குமரன் அவர்களின் சொற்பொழிவும் , சொற்பொழிவில் இருந்து மாணவர்களிடம் வினாக்கள் தொடுக்கப்பட்டுப் பாராட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.
அதனை அடுந்து ஆன்மிகவிருத்தினர் உரையும் குருபூஜையை முன்னிட்டு மாணவர்களிடம் நடாத்தப்பட்ட போட்டி பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பாரட்டுப் பரிசில்கள் வழங்கப்பட்டது.