அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முதல் கட்டம் தொடர்பான விரிவான மீளாய்வு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் முதல் கட்டம் பற்றிய விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது.

முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும்.

வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்
கடந்த அக்டோபர் மாதம் 14 இலட்சத்து ஆறாயிரத்து தொள்ளாயிரத்து முப்பது பயனாளிகளுக்கான பணம் தற்போது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

பயனாளிகளின் எண்ணிக்கையை 20 இலட்சமாக உயர்த்தி பொருத்தமானவர்களை தெரிவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதற்காக 2024ஆம் ஆண்டிற்கு 205 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor