கிளிநொச்சியில் பாரிய போராட்டங்கள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று 15 வருடங்களாக தமக்கு இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இதுவரையில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என தெரிவித்து வடக்கு, கிழக்கு தளுவிய போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்கத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், தமக்கு இழைப்பட்ட அநீதிகளுக்குபு சர்வதேச விசாரணை வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin