கோரம் இல்லாத காரணத்தினால் பாராளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சற்று முன்னர் அறிவித்தார்.
சபை அமர்வை கொண்டுசெல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 15 உறுப்பினர்கள் சபையில் இருக்க வேண்டும்.
வற் வரி திருத்தச்சட்டமூலம் மீது விவாதம் நடத்தி அதனை நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், சபையை கொண்டுசெல்ல உறுப்பினர்களின் எண்ணிகை போதாதென எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் கோரம் ஒலிக்கப்பட்டது.
என்றாலும், சபை அமர்வில் பங்குபற்ற எவரும் வராததால் சபையை நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.