2024 ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படும் பொருட்களின் பட்டியலை மீள் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், 138 பொருட்களில் 97 பொருட்களை மீள் பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலைத் திருத்துவதன் மூலம் அரசாங்கம் ரூ.378 பில்லியன் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2024 ஜனவரி 1, முதல் VAT வரியை 3 சதவீதம் அதிகரித்து 18 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தவிர VAT விலக்குகளை நீக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.